உணவகத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 60,000 டொலருக்கு வந்த கட்டண ரசீது
சீனாவில் தான் ஆர்டர் செய்த உணவினை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டவருக்கு சுமார் 60, 000 டொலர் உணவக கட்டணமாக வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்டர் செய்த உணவை இணையத்தில் பதிவிட்ட பெண்
நம்மில் பலருக்கும் உணவகத்தில் நாம் ஆர்டர் செய்த உணவை சமூக ஊடக பக்கங்களிலோ அல்லது நண்பர்களுக்கோ ஆசையோடு பகிர்வோம்.
அவ்வாறு சீனாவில் உள்ள உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்ற வாங்(Wang) என்ற பெண், தான் ஆர்டர் செய்த உணவினை புகைப்படம் எடுத்து சமூக ஊடக செயலியான WeChat-ல் பகிர்ந்துள்ளார்.
ஆனால் வாங் பகிர்ந்த அந்த உணவின் புகைப்படத்தில் உணவு ஆர்டர் செய்யும் QR code இருந்ததை அவர் பார்க்க தவறியுள்ளார்.
இந்நிலையில், வாங்கின் WeChat செயலியில் உள்ள தொடர்பாளர்களில் பலர் அந்த QR code-ஐ பயன்படுத்தி உணவினை தாறுமாறாக ஆர்டர் செய்துள்ளனர்.
இவ்வாறு ஆர்டர் செய்த உணவின் மதிப்பு 4,30,000 யுவான் மதிப்பை தாண்டி செல்லவே சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், இதனை உறுதிப்படுத்த வாங்கிடம் சென்று பேசியுள்ளனர்.
சீனாவில் உள்ள உணவகங்களில் QR code ஸ்கேன் செய்து, ஹோட்டலின் உணவு பட்டியலை பார்க்க முடிவதுடன், அதிலேயே ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் அதன் மூலமாக செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது ஆர்டர் செய்த உணவின் பட்டியல் மற்றும் அதன் விலையை கண்டு அதிர்ச்சியடைந்த வாங், தான் ஆர்டர் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
சில நிமிட குழப்பத்திற்கு பிறகு வாங் சமூக ஊடகத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் உணவு ஆர்டர் செய்யும் QR code இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
பின் உடனடியாக வாங்கை வேறு மேசையில் ஹோட்டல் ஊழியர்கள் அமர வைத்துடன், QR code மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவிற்கான கட்டணத்தில் இருந்தும் விடுவித்துள்ளனர்.russian-school-girl-shoot-few-classmates-1701967343
ஆனால் உணவினை QR code மூலமாக ஆர்டர் செய்தவர்கள் யார் யார் என்பதை பின்தொடர முடியவில்லை.
இறுதியில் உணவு ஆர்டர் விவரங்கள் மற்றும் அதன் கட்டண தொகை ஆகியவை தொடர்பான விவரத்தை வாங் பின்னர் இணையத்தில் பகிர்ந்துள்ளார், அது தற்போது வேகமாக பரவி வருகிறது.