அடுத்த ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தல்: மீண்டும் களமிறங்கும் புடின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த அறிவித்தலை நேற்றைய தினம் (8) விளாடிமிர் புடின் அறிவித்தார்.
ரஸ்ய உக்ரைன் போர் தொடரும் நிலையில் 2024ல் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளமை உறுதியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் தேர்தல்
அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் திகதி ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 5 வது முறையாக அதிபராக விளாடிமிர் புடின் வெற்றி பெறுவார்.
மேலும் 71 வயதான இவர் ரஷ்யாவின் 24 ஆண்டுகால தலைமைத்துவத்தில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆதரவு
பிரதமராக 8 ஆண்டுகள் இருந்ததோடு ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவில் அதிபராக அதிக ஆண்டுகள் விளாடிமிர் புடின் பதவி வகித்துள்ளார்.
ரஷ்யா மக்களின் கருத்துக்கணிப்பு படி 80 சதவீதத்திற்கும் மேலான ஆதரவை புதின் பெற்றுள்ளார்.