சீனாவில் பரவும் மர்ம நோய்: பிரித்தானியா மக்களுக்கு சுகாதாரத்துறை நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது, மக்கள் முகக்கவசம் அணிய முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் பரவி வரும் மர்ம நோயான நிமோனியா தொற்றானது ஐரோப்பாவையும் தாக்கியுள்ளது. சீனாவில் கடந்த சில வாரங்களாக பரவி வரும் மர்ம நோயால் உலக நாடுகள் பல அச்சத்தில் உள்ளது.
சீன மருத்துவமனைகள் இந்த நோயால் நிரம்பிக்காணப்படுவதோடு, சிறுவர்களே இதில் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மர்ம நோய்த் தொற்று
இந்த நோய் குறித்து, உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், ஐரோப்பாவில் இந்த பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என அமெரிக்க நோயியல் நிபுணரான Donald Karcher தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த தொற்றிலிருந்து பாதுகாக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் கொண்டாடங்கள் தடை
இந்நிலையில் தான் கிறிஸ்மஸ் கொண்டாடங்கள் ஆரம்பமாக உள்ள நிலையில், பிரித்தானியர்கள் கொண்டாடத்தின் போது, முகக்கவசம் அணிய முன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியா நிர்வாகம் நோய்த்தொற்று தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், இந்த ஆண்டும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சீர்குலையும் என நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.