ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் தேனீயால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்
மத்திய பிரதேச மாநிலத்தில் தேனீ கிடந்துள்ள தண்ணீரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரில் தேனீ
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா சிங் (வயது 22). இவர் கடந்த 6 -ம் திகதி இரவு வீட்டில் இருந்த போது தாகம் எடுத்துள்ளது. இதனால், ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து குடித்துள்ளார்.
பின்னர், தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே ஹிரேந்திரா சிங்கிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இவர் குடித்த தண்ணீரில் தேனீ ஒன்று கிடந்துள்ளது. அந்த தேனீயானது அவரது உணவுகுழாய்க்குள் சென்று கடித்துள்ளது.
இளைஞர் மரணம்
இதனைத்தொடர்ந்து, ஹிரேந்திரா சிங்கிற்கு எரிய ஆரம்பித்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனில்லாமல் 7 -ம் திகதி அதிகாலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இது குறித்து காவல் ஆய்வாளார் நரேந்திரா குலஸ்தே பேசுகையில், ஹிரேந்திரா சிங் சிகிச்சையின் போது வாந்தி எடுத்ததில் தேனீ வெளியில் வந்துவிட்டது என்று கூறினார்.