மீண்டும் நிறுத்தப்படும் வடக்கிற்கான தொடருந்து சேவைகள்
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.
நவீனமயமாக்கல் திட்டம்
வடக்கு தொடருந்து பாதையின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான தொடருந்து சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையிலும் மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.