;
Athirady Tamil News

சிறு குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் புதிய சட்டம்! விஜயதாச ராஜபக்ச

0

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களை செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதை போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

சிறு குற்றங்களை செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும்.

சிறையில் இருந்து விடுதலை
சில நீதிமன்றங்கள் சிறு குற்றங்களை செய்தவர்களை சிறையில் அடைப்பதோடு, பிணை வழங்குவதில் நீதிமன்றங்கள் தனது விருப்புகளை காட்டி வருகிறது.

இந்த நாட்டின் சட்டப்படி விசாரணைகள் நிறைவடையாதது, சில இளைஞர்கள் சிறையில் இருந்து விடுதலை போன்ற காரணங்களால் பிணை மறுக்க வாய்ப்பு உள்ளது.

எனவே , பிணை வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும் என நம்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.