ஆடு,மாடு,கோழிக்கு பதிலாக நாய்,பூனைகளை வளர்க்க கால்நடை மருத்துவர்கள் மக்களுக்கு அழுத்தம்
விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்துக்குரிய கால்நடைகளான மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பதற்குப் பதிலாக நாய், பூனை போன்ற விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்க்குமாறு அரசாங்க கால்நடை மருத்துவர்கள் மக்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வீடுகளில் நாய், பூனைகளை வளர்ப்பது குழந்தைகளிடம் அன்பு, கருணை போன்ற மனிதப் பண்புகளை வளர்க்க பெரும் உதவியாக இருப்பதாக அவர்கள் தெரிவிப்பதாக விவசாய, கால்நடை மற்றும் பெருந்தோட்ட அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர்.
கால்நடை வைத்தியர்களின் செயற்பாட்டால்
கால்நடை வைத்தியர்கள் இவ்வாறு செயற்பட்டால் விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்துக்குரிய கால்நடைகளை வளர்க்கும் போக்கு குறையும் எனவும் எம்.பி.க்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு மருத்துவம் செய்வதில் அடிமை
அதுமட்டுமல்லாமல், நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு மருத்துவம் செய்யும் தனியார் சேவைக்கு மருத்துவர்கள் பெரிதும் அடிமையாகி இருப்பதாகவும் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் சில கால்நடை மருத்துவர்கள் இதுபோன்று செயல்பட்டால் எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் கால்நடைத்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.