காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை
பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது.
குறித்த யோசனைக்கு பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 13 பேர் தீர்மானத்திற்கு வாக்களித்த போதிலும் அமெரிக்கா அந்த யோசனையை வீட்டோ செய்துள்ளது.
அவசரக் கூட்டம்
பிரான்ஸ், ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நிரந்தர உறுப்பினர்களுடன் உடனடி போர் நிறுத்தத்திற்கு வாக்களித்ததோடு ஐக்கிய இராச்சியம் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரிதாகப் பயன்படுத்தப்படும் பிரிவு 99 ஐப் உபயோகப்படுத்தினார்.
இதன்படி, காஸாவில் மனிதாபிமான அமைப்பின் சரிவு மற்றும் “மனிதாபிமான பேரழிவை” தடுக்க பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 97 க்கும் மேற்பட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
இந்நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இதுவரை 17,500 பேர் உயிரிழந்துள்ளனர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
மேலும், இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் பெல்ஜியம், ஸ்லோவேனியா, ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, போலந்து மற்றும் போர்த்துக்கல் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.