;
Athirady Tamil News

24 மணி நேரத்தில் 200ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு

0

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதலில் 200 ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன் 2300 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டொக்டர் அஷ்ரஃப் அல்-குத்ரா,தெரிவிக்கையில்,

தொடர் தாக்குதல்
210 இறந்த உடல்கள் மற்றும் 2,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வந்ததாக கூறினார்.

மேலும், அம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருவதால், ஏராளமான காணாமல் போனவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் உள்ளனர், அவர்களை மீட்க முடியவில்லை என குறிப்பிட்டார்.

குறிவைக்கப்படும் மருத்துவமனைகள்
இஸ்ரேலிய இராணுவம் மருத்துவமனைகளையும் மருத்துவ ஊழியர்களையும் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல்களை மேற்கொண்டு பல கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றதுடன் பலரை காயப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு காசாவில் வசிப்பவர்கள் “வீட்டிற்கு வீடு மற்றும் பாடசாலைகளில் அழிக்கப்படுகிறார்கள், மேலும் மருத்துவமனைகளின் முற்றுகையின் விளைவாக காயமடைந்தவர்கள் இறக்க நேரிடுகிறது” என்று அல்-குத்ரா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.