;
Athirady Tamil News

ஊழல்வாதிகளின் செல்வங்கள் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் : சஜித் வலியுறுத்து

0

இந்நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணமான ஊழல்வாதிகளின் செல்வங்களை இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(10), 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்தை,அரசாங்கத்தின் சீரற்ற பொருளாதார முகாமைத்துவத்தால் நாடு வங்குரோத்தாகி,நாட்டு மக்கள் சந்தித்து வரும் நெருக்கடி சூழ்நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,

பெறுமதி சேர் வரி
“இந்நாட்டில் பெறுமதி சேர் வரியை அதிகரிப்பது நியாயமற்றது.

செயல்திறனற்ற மூலதன முகாமைத்துவத்தால் உருவாக்கிக்கொண்ட வரிக் கொள்கை ஊடாக,இந்நாட்டில் பெரும் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், விரிவுரையாளர்கள்,வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,கணினிப் பொறியியலாளர்கள் என பல்வேறு தரப்பினர் நாட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க, 47 தொழில் வல்லுநர்கள் அமைப்புகள் முன்வைத்துள்ள, நியாயமான வெளிப்படைத்தன்மையான கருத்துக்களை அடிப்படையாக கொண்ட வரி சூத்திர முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.

இலங்கையின் “பரேட்” சட்டத்தின் ஊடாக சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழல் புரிவோருக்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பரேட் சட்டத்தினால் இலங்கையில் வங்கிகள் நன்மை அடைந்தாலும்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை.

வரலாற்றில் முதல் தடவையாக நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளுப்பட வரிச்சலுகை வழங்கியமையே காரணம்.” எனஎதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.