பாடசாலைகளில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சூரிய கலங்களை பொருத்தும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் இதன் ஆரம்ப நடவடிக்கை மினுவாங்கொடை கல்விப் பிரிவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் 20,000 ரூபா
அதிக மின்சார கட்டணத்தை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் 20,000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணத்தை பெறும் பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தியை பெற்றுக் கொடுக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.