வங்கதேசத்தில் 24 மணிநேரத்தில் டெங்குவுக்கு 9 பேர் பலி
வங்கதேசத்தில் 24 மணிநேரத்தில் டெங்குவுக்கு 9 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் டெங்குவால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்துடன் நடப்பு ஆண்டில் மட்டும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 1661-ஐ கடந்துள்ளது. சுகாதார சேவைகள் இயக்குநரகம் படி, மேலும் 459 நோயாளிகள் வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்காவில் 580 பேர் உட்பட 2,291 டெங்கு நோயாளிகள் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோயால் இதுவரை 3.17 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 3.13 லட்சம் பேர் டெங்குவிலிருந்து மீண்டுள்ளனர் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 79,598 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 396 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.