பெருந்தொகை பண மோசடி வழக்கில் சிக்கிய திலினி பிரியமாலி! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
வாகனமொன்றை பெற்றுக்கொண்டு பெறுமதியான காசோலைகளை வழங்கி பணம் மோசடி செய்தமைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திலினி பிரியமாலி விடுவிக்கப்பட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 8 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டு பணமில்லா கணக்கிலிருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரச தரப்பு சட்டத்தரணி மற்றும் பிரதிவாதிகள் ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பணமோசடி
இதேவேளை, கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில்,அரசாங்கத்தின்பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.