சர்க்கரை நோய் மற்றும் உடல் எடையை குறைக்க வேண்டுமா? மூலிகை தேநீர் அற்புதம்
இன்று பெரும்பாலான மக்கள் தேநீர் அருந்தும் பழக்கத்தை விரும்புகின்றனர். தேநீர் அருந்துவதால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகின்றது.
கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் தேயிலையின் முக்கியத்துவம் கருதி டிசம்பர் 15ம் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்படுகின்றது.
தேநீரின் சுவைக்கும், நறுமணத்திற்கும் காரணமான தேயிலையுடன் மூலிகைகளையும் கலந்து பருகலாம்.
மூலிகை டீ வகைகள்
தேயிலை மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி டீ தயார். குளிர்காலத்தில் உண்டாகும் சளி, இருமல் பிரச்சினையையும் தடுக்கின்றது.
காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தேயிலையுடன் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்து பருகினால், உடல் வெப்பத்தை தணிப்பதுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.
கொதிக்கும் தண்ணீரில் தேயிலை சேர்த்து வடிகட்டிய பின்பு எலுமிச்சை சாறு கலந்து லெமன் டீ-யாக குடித்தால் உடல் எடை குறையும்.
தேயிலையுடன் கொய்யா இலைகளை போட்டு கொதிக்க வைத்து கொய்யா டீ பருகலாம், இதே போன்று கொய்யா இலைக்கு பதிலாக கொத்தமல்லி அல்லது புதினா இலையை சேர்த்து குடிக்கலாம்.
கொதிக்கும் தேயிலையுடன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
இதே போன்று தேயிலையுடன் இஞ்சி சேர்த்து இஞ்சி டீயாக பருகினால் சளி மூக்கடைப்பு பிரச்சினை தீரும்.
முருங்கை கீரை மற்றும் எலுமிச்சை இலை கலந்து தேயிலையுடன் கொதிக்க வைத்து குடித்தால், பெண்களுக்கு ரத்த சோகை வராமல் தடுக்கும்.
செம்பருத்து அல்லது ஜோரா இதழ்களை தேயிலையுடன் கொதிக்க வைத்து குடித்தால் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்.
தேயிலையுடன் கற்பரவல்லி இலையை பொடி செய்து கொதிக்க வைத்து டீ-யாக குடித்தால் செரிமான கோளாறு மற்றும் சிறுநீரக கோளாறு தீரும்.