நாட்டில் அதிகரித்த அரிசி விலை : நுகர்வோர் குற்றச்சாட்டு
இலங்கையில் அரிசி விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாயாக இருந்த சம்பா அரிசியின் விலையை 260 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
300 ரூபாய்க்கு விற்கப்படும்
ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை மற்றுமொரு நிறுவனம் 245 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிறுவனங்களுக்கு விருப்பம்போல் விலையை உயர்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் சம்பா அரிசியின் விலை ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்படும் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பண்டிகைக் காலம் நெருங்குவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.