வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை இலக்கு வைத்து வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக வளர்க்கப்படும் 50,000 கோழிக்குஞ்சுகளை, இறைச்சிக்கான கோழி வளர்ப்பில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர்களிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கையை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை எடுத்துள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறித்த கோழிக்குஞ்சுகளை இலவசமாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தி
இதேவேளை, முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நாட்டுக் கோழிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டமொன்றை தேசிய ஹதபிம அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20,000 நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.