ஜப்பானில் செத்து கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்: மக்களுக்கு அரசு எச்சரிக்கை
ஜப்பானின் ஹகோடேட் தீவுக்கு அருகில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செத்து கரை ஒதுங்கிய மீன்கள்
ஜப்பானின் பிரபல சுற்றுலா தளமான ஹகோடேட் தீவில் சமீபத்தில் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிலர் அந்த மீன்களை எடுத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அப்பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்க தொடங்கியுள்ளன.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுகள் நீரில் கலந்ததால் தான் மீன்கள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
அரசு எச்சரிக்கை
இந்த நிலையில், கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் யாரும் சாப்பிட வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.
அத்துடன் மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கண்டறிய ஆராய்ச்சியாளர்களையும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி அரசு வைத்துள்ளது.
மாதிரி பரிசோதனைகள் முடிந்த பிறகே மீன்கள் செத்து கரை ஒதுங்கியதற்கான காரணம் என்னவென்று தெரிய வரும் என்று அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.