பொதுமக்கள் யானைகளுக்கு உணவளிக்க வேண்டாம்: இலங்கை தேசிய பூங்கா எச்சரிக்கை
யானைகளுக்கு பொதுமக்கள் யாரும் உணவளிக்க வேண்டாம் என யால தேசிய பூங்கா நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வைரலான வீடியோ
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ ஒன்றில், உணவுக்காக பொதுமக்கள் வாகனங்களை இடைமறித்து வாகனத்திற்கு யானை நுழைவதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக, உணவுக்காக பொதுமக்கள் வாகனத்திற்குள் நுழைய முற்படும் யானை நந்திமிராவுக்கு யாரும் உணவளிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.
யானைகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதால் தான் இது போன்ற குணாதியங்கள் யானைகளுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் யால தேசிய பூங்கா கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தீங்கு விளைவிக்காது
மேல் குறிப்பிட்ட நந்திமிரா யானையால் யாருக்கும் தீங்கு ஏற்படாது, ஆனால் உணவுக்காக யானை அதன் தும்பிக்கையை வாகனத்திற்குள் நுழைக்கும் போது அதன் தந்தங்கள் வாகனங்களில் சிக்கி கொள்ளும் அபாயம் இருப்பதாக கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
யானைகள் நடமாட்டம் அடிக்கடி கதிர்காமம் – சித்துல்பவ்வ வீதி மற்றும் திஸ்ஸ-சித்துல்பவ்வ வீதியிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.