கனடாவில் விஷம் வழங்கி தற்கொலை செய்த தூண்டியவர் மீது பாயும் குற்ற வழக்கு: காத்திருக்கும் தண்டனை
கனடாவில் விஷத்தினை விற்பனை செய்து வந்த கென்னத் லா என்பவர் மீது பல்வேறு கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
விஷ விற்பனையாளர்
கனடாவில் தற்கொலை செய்து கொண்ட பலருக்கு விஷ தன்மை கொண்ட கெமிக்கலை வழங்கியதாக கூறப்படும் நபர் கென்னத் லா(Kenneth Law) மீது பல அடுக்கு கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு உதவியாக கொடிய ரசாயனத்தை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 57 வயதான கென்னத் லா மீது 14 இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கென்னத் வழங்கிய கொடிய விஷம் மூலம் ஒன்டாரியோ(Ontario) 14 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், 14 குற்றச்சாட்டுகளை தாண்டி இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகிறார்கள்.
அதே சமயம் பிரிட்டிஷ் புலனாய்வாளர்கள் கென்னத் மீது 90 கொலை தூண்டுதல் குற்றத்துடன் தொடர்பு படுத்தியுள்ளனர்.
தற்போது பொலிஸாரின் காவலில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் கென்னத் லா, கனடா, இங்கிலாந்து உட்பட 40 நாடுகளை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடிய விஷ தன்மை கொண்ட பொருளை பார்சலில் அனுப்பி இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
மேலும் இதற்காக அவர் பல வலைதளங்களை இணையத்தில் நடத்தி வருவதாகவும் சர்வதேச விசாரணையில் ஒத்துழைப்பு வழங்கி வரும் ஒன்டாரியோ பொலிஸார் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதால் பொலிஸார் தரப்பு கூடுதலாக எந்தவொரு தகவலை வழங்கவில்லை.
ஆனால் கனடாவின் சட்ட விதிப்படி இரண்டாம் நிலை குற்றம் நிருபிக்கப்பட்டால், கென்னத் லா ஆயுள் தண்டனை எதிர்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.