;
Athirady Tamil News

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

0

புது தில்லி: இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மக்கள்தொகை – மருத்துவா்கள் விகிதம் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் இது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியுள்ளதாவது:

நாட்டில் மொத்தம் 36.14 செலிவியா்கள் உள்ளனா். செவிலியா்-மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் மாத நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவா்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனா்.

5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள் உள்ளனா். அந்த வகையில், நாட்டில் மருத்துவா்கள்-மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.

மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் மருத்துவம் பயில்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் இப்போது நாட்டில் 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இது 82 சதவீத உயா்வாகும்.

2014-இல் 51,348 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 1,08,940 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவ மேற்படிப்புக்கான இடம்31,185-இல் இருந்து 70,674 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இது 127 சதவீத அதிகரிப்பாகும் என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.