15 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் பாஜக MLA குற்றவாளி.., 10 ஆண்டுகளுக்கு பின் அதிரடி தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
பாஜக MLA மீது வழக்குப்பதிவு
உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராம்துலார் கோண்ட் ஆவார்.இவர் மீது கடந்த 2014 -ம் ஆண்டு 15 வயது சிறுமி வன்கொடுமை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் ராம்துலார் கோண்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது மட்டுமல்லாமல், மேலும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளி என தீர்ப்பு
இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ராம்துலார் கோண்ட் எம்.எல்.ஏவாக இல்லை. பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றதால் இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், விசாரணையின் முடிவில் ராம்துலார் கோண்ட் குற்றவாளி என சன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே, சம்பவம் நடைபெற்ற போது இவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.