;
Athirady Tamil News

வயிற்றுவலியுடன் அவதிப்பட்ட இளம்பெண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

வயிற்று வலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணை பரிசோதனனை செய்த போது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

10 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் . 37 வயது பெண். பிரச்சினை என்று பார்த்துவிடுவோம் என அவர் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.

பிரித்தானியாவில், மருத்துவமனையில் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பரிசோதனைகள் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு கொண்டனர்.

அதாவது பெண்களின் சூலகம் அல்லது கருப்பையில் உருவாகும் கருமுட்டை, ஆணுடைய உயிரணுவுடன் இணையும் போது, பெண்ணின் கர்ப்பப்பையை வந்தடைந்து, கர்ப்பப்பையின் சுவருடன் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு குழந்தையாக உருமாறி வளரும். இப்படி கர்ப்பப்பையில் குழந்தை உருவாகாமல், ஃபாலோப்பியன் குழாய் என்னும் கருமுட்டைக்குழாயில் குழந்தை உருவாகிவிடுவதுண்டு.

இத்தகைய அசாதாரண கர்ப்பம், தாய்க்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் இந்த பிரித்தானிய பெண்ணுக்கோ, கரு முட்டைக்குழாயில் கூட குழந்தை வளரவில்லை, அது அவரது வயிற்றுக்குள் வளர்ந்திருந்தது.

அதாவது, உணவுக்குழாயின் ஒரு பகுதியான வயிற்றுக்குள் அந்த குழந்தை வளர்ந்திருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அதுவும், அவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்யும்போது, அது ஆறுமாதக் குழந்தையாக வளர்ந்து விட்டிருந்தது. கர்ப்பப்பைக்கு வெளியே வளரும் குழந்தையால், தாயின் உயிருக்கு ஆபத்து என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்துவிட்டார்கள்.

இப்படி கர்ப்பப்பைக்கு வெளியே ஒரு குழந்தை வளர்வதே ஆச்சரியம் என்றால், இந்த குழந்தை பிழைத்துக்கொண்டது என்பது அதைவிட பெரிய ஆச்சரியம். அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அந்த குழந்தை, கைக்குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப்பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

25 நாட்களில் அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட, இரண்டு மாதங்களுக்குப் பின் அவரது குழந்தையும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.