ரஷ்ய உக்ரைன் போர்: படை வீரர்களை இழந்து தவிக்கும் ரஷ்யா
ரஷ்ய உக்ரைன் போரில் இதுவரையில் ரஸ்யாவில் 90% பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த இழப்பு ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி இல் 360,000 பணியாளர்களுடன் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கியது.
வீரர்களின் இழப்பு
அப்போதிருந்து, 315,000 ரஷ்ய படையில் அல்லது மொத்த வீரர்களில் சுமார் 87% பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அறிக்கை மதீப்பீடு செய்துள்ளது.
இந்நிலையில் வீரர்களின் அதிப்படியான இழப்பு போரை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு கடினமாவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரை முன்னகர்த்தி செல்ல வேண்டிய தேவை உள்ளதால் தகுதிகள் குறைந்த வீரர்களை படையில் ரஷ்யா சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.