விண்கல் மழையை அவதானிக்க முடியும்: ஆர்தர் சி.கிளார்க் நிலையம் தகவல்
வடக்கு மற்றும் கிழக்கு வானில் இன்று விண்கல் மழையை அவதானிக்க முடியுமென ஆர்தர் சி.கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட குறிப்பிட்டுள்ளார்.
பைதான் 3,200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது நிகழ்கிறது என்று கூறப்படுகிறது.
விண்கல் மழை அவதானிப்பு
அதன்படி, பைதான் 3,200 சிறுகோளின் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பிறகு இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இரவு 9 மணிக்குப் பின் வடக்கு மற்றும் கிழக்கு வானில் அவதானிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெளிவான வானில் ஒரு மணி நேரத்திற்கு 100 முதல் 120 விண்கற்கள் வரை அவதானிக்கலாம் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.