;
Athirady Tamil News

4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: 20 வருடங்கள் சிறை தண்டனைக்கு பிறகு தெரியவந்த உண்மை

0

அவுஸ்திரேலியாவில் 4 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட தாய் 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட தாய்
அவுஸ்திரேலியாவில் 1989 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் காலேப், பேட்ரிக், சாரா, லாரா, ஆகிய நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களுடைய தாய் கேத்லீன் போல்பிக்கின்(Kathleen Folbigg) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கேத்லீன் போல்பிக்கின் தன்னுடைய 4 குழந்தைகளையும் அடித்தே கொன்றதாக குற்றம் சாட்டியதுடன் 2003ம் ஆண்டு கொலையாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின் மேல்முறையீட்டில் அவருக்கான சிறை தண்டனை 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

தெரியவந்த உண்மை
தான் குழந்தைகளை கொலை செய்யவில்லை என தெரிவித்து தாய் கேத்லீன் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 2019 ஆண்டு விசாரணையின் போதும் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

இறுதியில் 2022ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் மீது நியாயமான சந்தேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியூ செளத் வேல்ஸ் மாகாண இந்த ஆண்டு ஜூன் மாதம் தாய் கேத்லீனை மன்னித்து சிறையில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் 4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய் கேத்லீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நம்பமானதாக இல்லை என தெரிவித்து நியூ செளத் வேல்ஸ் நீதிமன்றம் அவரை இன்று இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

அதே சமயம் இத்தனை ஆண்டுகள் சிறையில் தவறுதலாக அடைக்கப்பட்ட கேத்லீனுக்கு இழப்பீடு வழங்க கோரி அவரது வழக்கறிஞர் ரனீ ரெகோவின் சட்டக்குழு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.