;
Athirady Tamil News

தமிழகத்தில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா – அமைச்சர் முக்கிய தகவல்!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் தொன்மைத் தமிழ்நாடு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “புதிய வகை வைரஸ் தொற்று ஒன்று சிங்கப்பூர், கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பரவி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் நேற்று 230 என்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அமைச்சர் தகவல்
இதுவரை 1104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது சுகாதாரத் துறை இயக்குநர் கேரளாவில் உள்ள சுகாதார துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் மிதமான பாதிப்பு உள்ளதாக தான் சொல்லப்பட்டு வருகிறது.

நானும் நேற்று சிங்கப்பூரில் உள்ள மருத்துவர்கள், நண்பர்களோடும் 3000கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு என்று கேட்டறிந்தேன். இந்த தொற்று 3, 4 நாட்கள் சளி, இருமலோடு சரியாகிவிடும் என்று கூறினார்கள். எனவே, பதற்றம் தேவை இல்லை. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று 264 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் பாதிப்பு 8 பேர், அதில் சென்னையை சேர்ந்தவர்கள் இரண்டு பேர். இது எந்த வகையான உருமாற்றம் என்பதை கண்டறிய ஆய்விற்கு அனுப்ப கூறி உள்ளோம். 3, 4 நாட்களில் முடிவு வந்த பின்னர் எந்த வகை என்று தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.