2026-இல் ஆட்சி லட்சியம் – நிச்சயமாக வெல்வோம் – பிரேமலதா விஜயகாந்த் உறுதி..!!
கட்சியின் வெற்றிக்காக ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் வரும் 2026-ஆம் ஆண்டின் தேர்தலில் வெற்றி பெறுவோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா பேட்டி
தேமுதிகவின் பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைபெற்று பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த். தமிழக அரசியல் களத்தில் இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவின் தொண்டர்களும் மீண்டும் தங்களின் கட்சி பெரும் எழுச்சியை சந்திக்குமா? என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
இந்நிலையில், தான் தனியார் தொலைக்காட்சி பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.அதில், தனக்கு இந்த பதவியை வழங்கிய தொண்டர்கள் மற்றும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இப்பதவி வெறும் பதவியல்ல என்று குறிப்பிட்ட அவர், இது பெரும் சவால் என்றும் இன்றைக்கு அரசியலில் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன என்றும் கூறினார்.
2026-இல் ஆட்சி
கட்சி தொண்டர்களின் ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த சவாலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்த பிரேமலதா, தேமுதிக ஆட்சியில் அமர்த்துவோம் என்ற விஜயகாந்தின் இலட்சியத்தை அடைவோம் என்று கூறி அதனை நோக்கி பயணிப்பதால் தான் இதனை தான் முள்கிரீடம் என்றவதாகவும் கூறினார்.
மேலும், விஜயகாந்த் உடல் நிலை குறித்தும் பேசிய அவர், அந்த விஷயத்தில் தவறான வதந்திகளை பரப்பியதால் பலரும் மன பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்று சுட்டிக்காட்டி, எப்போது வரணுமோ கேப்டன் அப்போது வருவார் என்றும் மீண்டும் கூறினார். தொடர்ந்து, எங்களுடைய லட்சியம் 2026-இல் ஆட்சியில் அமர்வது என்று குறிப்பிட்டு, அதில் உறுதியாக வெல்வோம் என்று கூறி 2026-ஐ இலக்காக கொண்டு வேலைகளை செய்து, பயணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.