காத்திருக்கும் அழிவுகள்: நாஸ்ட்ராடாமஸின் திகிலூட்டும் கணிப்புகள்
2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து புகழ்பெற்ற ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
நாஸ்ட்ராடாமஸ் என்பவர் 16ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் ஆவார், அவர் அழிவின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் 2024 ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள சில பயங்கரமான கணிப்புகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அழிவுகள்
அதன்படி, “சீனா போர் அல்லது கடல் போரில் ஈடுபடலாம், இங்கிலாந்தின் அரச குடும்பம், எதிர்காலத்தில் கூடுதல் சவால்களை சந்திக்கலாம், காலநிலை மாற்றம் மோசமாகிவிடும், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்ற அதிக தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும், உலகளாவிய பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவை அதிகரிக்கும், போப் பதவியில் மாற்றம் ஏற்படலாம்” என்றெல்லாம் கணித்துள்ளார்.
அத்தோடு, முன்னதாக, ஹிட்லரின் எழுச்சி, ஜே.எஃப்.கே படுகொலை, கோவிட் தொற்றுநோய் போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை அவர் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.