;
Athirady Tamil News

மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ள இலங்கையின் பொருளாதாரம்: பிரதான காரணிகள்

0

ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீண்டு வருகிறது
அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்கொண்டுவந்த மோசமான நிதி நெருக்கடியிலிருந்து இலங்கை தற்போது மீண்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாகவும் மிதமான பணவீக்கம், பண மதிப்பை வலுப்படுத்த நடவடிக்கை மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் உள்ளிட்டவையை பிரதான காரணிகளாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இலங்கையின் வேளாண் துறை கடந்த வருடத்தை விட 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் தொழில்துறை உற்பத்தியில் 0.3 சதவீதம் அதிகரிப்பு, மேலும் தொழில்துறை சேவைகள் 1.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் தொகையை அளித்தன் மூலம் தற்போதைய வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை என்றே சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

சவாலான சீர்திருத்தங்கள்
இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என்றும், 2022ல் இது 7.8 சதவீதமாக இருந்தது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் 2024ல் இலங்கை பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி காணப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூடுதலாக 1.8 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை இலங்கை பதிவு செய்யலாம் எனறும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிக வரி விதிப்பு, நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களுக்கான சீர்திருத்தங்கள் மற்றும் அதன் வெளிநாட்டுக் கடனை முழுமையாக மறுசீரமைத்தல் போன்ற சவாலான சீர்திருத்தங்களை நாடு எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக கூறுகின்றனர்.

முன்னதாக இலங்கை மத்திய வங்கியானது வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஜூன் மாதத்தில் இருந்து 650 bps வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதனால் பணவீக்கமானது 3.4 சதவீதமாக குறைந்தது. 2022 செப்டம்பரில் பணவீக்கமானது 70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.