;
Athirady Tamil News

மரணமடைந்த இரு சிறுவர்களின் விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்த எஸ்.டி.ஐ.ஜி (SDIG) -Video, Photos-

0

அண்மையில் சம காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களினால் மரணங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதற்கமைய இவ்விரு மரணங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ உட்பட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக உட்பட மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பல்வேறு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இஸ்லாமபாத் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பெண்கள் பராமரிப்பு நிலையத்தில் இறந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் ஆகியொர் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண விசாரணை முன்னெடுப்பு தொடர்பில் விளக்கி கூறினர்.

அத்துடன் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் இன்று(5) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு தொடர்பாக விளக்கமாக கூறினர்.

இவ்விரு மாணவர்களின் விசாரணை முன்னெடுப்புக்களை கவனமெடுத்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண மேலதிக புலன் விசாரணை மேற்கொள்வதற்காக ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.