அர்ஜென்டினாவில் புயல் காற்றில் இடிந்து விழுந்த விளையாட்டு மைதானத்தின் மேற்கூரை: 13 பேர் பலி
அர்ஜென்டினாவில் விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இடிந்து விழுந்த மேற்கூரை
அர்ஜெண்டினாவின் துறைமுக நகரான பஹியா பிளாங்காவை கடும் புயல் மற்றும் கனமழை தாக்கியது. கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றானது நகரை தாக்கியது.
இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Damages occur in Bahía Blanca, Buenos Aires province, Argentina 🇦🇷 causes due to StrongWinds on | 16 December 2023 | #Argentina #storm #BahíaBlanca #StrongWinds #Breaking #Latest #BuenosAires #ArgentinaWeather #Damages #climateCrisis pic.twitter.com/FAojdCida0
— Nitesh rathore (@niteshr813) December 17, 2023
இந்நிலையில் அர்ஜெண்டினாவின் பஹியா பிளாங்காவில் ஏற்பட்ட புயல் காற்று மற்றும் கன மழைக்கு மத்தியில் அங்குள்ள விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேற்கூரை இடிந்து விழுந்த மைதானத்தில் ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.