3 வயது சிறுமி மீது ஏறிய காரின் முன் சக்கரம்: பெங்களூருவில் ஏற்பட்ட சோகம்
பெங்களுருவில் சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது சிறுமி மோதிய கார்
இந்தியாவின் பெங்களூர் மாநிலத்தில் டிசம்பர் 9ம் திகதி சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமி மீது கார் மோதியதுடன் அதன் முன் சக்கரம் ஏறிச் சென்றதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், சிறுமி சாலையில் அமர்ந்து விளையாடி கொண்டு இருக்கும் போது அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே இருந்து வெளியே திரும்பும் காரின் முன் பகுதி குழந்தை மீது மோதுகிறது.
பின் தொடர்ந்து காரின் முன்புறச் சக்கரம் குழந்தை மீது ஏறி செல்கிறது, இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட போது அருகில் நடந்து சென்ற நபர் இதனை பார்த்து, உடனடியாக காரின் அடியில் இருந்து சிறுமியை வெளியே எடுப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
உடற்கூறு பரிசோதனையின் இறுதியில் சிறுமியின் தலைப் பகுதியில் ஏற்பட்ட தீவிரமான உள் காயங்களால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், உயிரிழந்த குழந்தையும், விபத்து ஏற்படுத்திய கார் உரிமையாளரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.