திருமண நிகழ்வில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மகிந்த
கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இலங்கையின் உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளான மகிந்த, ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதன்போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவம்
ஜனாதிபதி தேர்தலை குறித்து பலர் போட்டியிடவுள்ளதாக கேள்விப்பட்டேன். எனினும் தேர்தலில் பொதுஜன பெரமுன ஆதிக்கம் செலுத்தும் என இதன்போது மகிந்த தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இரவு நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.