;
Athirady Tamil News

மரணதண்டனையின் விளிம்பில் விளாடிமிர் புடினின் பிரதான எதிரி: கலக்கத்தில் ஆதரவாளர்கள்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிரதான எதிரி என கருதப்படும் அலெக்ஸி நவல்னி தமது சிறை அறையில் இருந்து திடீரென்று மாயமாகியுள்ள நிலையில், அவர் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பாதுகாப்பு மிகுந்த சிறை ஒன்றில்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னி கடந்த 5ம் திகதி முதல் அவரது சிறை அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். மாஸ்கோவின் கிழக்கே அமைந்துள்ள பாதுகாப்பு மிகுந்த சிறை ஒன்றில் கடந்த ஓராண்டாக அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் மாகாண ஆளுநர் தெரிவிக்கையில், அலெக்ஸி நவல்னி தற்போது சிறையில் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், நவல்னியின் FBK கட்சியின் தலைவரான Maria Pevchikh தெரிவிக்கையில்,

அவரது பாதுகாப்பு தொடர்பில் கவலையாக உள்ளது. முன்பு அவரைக் கொல்ல முயன்ற அதே நபர்களின் கைகளில்தான் அவர் தற்போது சிக்கியுள்ளார். அதிகார வட்டாரத்தில் இருந்து அனுமதி கிடைத்தால் அவர்கள் நவல்னியை கொன்று விடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆகஸ்டு மாதம் 47 வயதான நவல்னி சோவியத் காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த விஷ மருந்தால் தாக்கப்பட்டார். அதில் இருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.

புடினுக்கு எதிரான பலர்
மட்டுமின்றி, தீவிரவாதம் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டார். எதிர்வரும் 2024 மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்படும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் விளாடிமிர் புடின், மேலும் 6 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என்றே நம்பப்படுகிறது.

இந்த நிலையில், தொடர்புடைய தேர்தலில் நவல்னியின் தாக்கம் இருந்துவிடக் கூடாது என்று விளாடிமிர் திட்டமிட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கலாம் என்று நவல்னியின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

மட்டுமின்றி, சமீப ஆண்டுகளில், விளாடிமிர் புடினுக்கு எதிரான பலர் மிக மோசமான மரணத்தை எதிகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.