;
Athirady Tamil News

81 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை Dark Webல் கசியவிட்டு பணம் சம்பாதித்த கும்பல் கைது

0

ICMR Data Bankல் இருந்து தகவல்கள் கசிந்த வழக்கில் 4 பேரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

81 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்ட வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ICMR Data Bankல் இருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் Dark Webல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு மூன்று மாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்த B.Tech பட்டதாரி ஆவார். கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகள் ஹரியானா மற்றும் ஜான்சியை சேர்ந்தவர்கள்.

தகவல் கசிவு உறுதி செய்யப்பட்டதையடுத்து, டெல்லி பொலிஸார் சொந்தமாக வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், பாகிஸ்தானின் ஆதார் எண்ணுக்கு இணையான கணினிமயமாக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் கசிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் பணம் சம்பாதிப்பதற்காக தகவல்களை கசியவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். CERT குழு தரவு மீறலின் தன்மையை ஆராய்ந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.