;
Athirady Tamil News

கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்… நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளிவரும் பின்னணி

0

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், இஸ்ரேல் அறிவித்துள்ள நீண்ட கால போருக்கும் அவர்கள் அஞ்சப்போவதில்லை என்றே கூறப்படுகிறது.

அதன் பொருளாதார பின்னணி
ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் இதுவரை பாலஸ்தீன மக்கள் 19,000 பேர்களை வான் தாக்குதல் மற்றும் குண்டுவீச்சால் கொன்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்றே அஞ்சப்படுகிறது.

ஆனால் ஹமாஸ் படைகளை அதன் பொருளாதார பின்னணியை சிதைக்காமல் ஒழிக்க முடியாது என்பதை இஸ்ரேல் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே நிபுணர்கள் பலர் குறிப்பிடுகின்றனர்.

கனேடிய நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், ஹமாஸ் படைகள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் தேவைக்கும் அதிகமான நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்துள்ளனர்.

பல நாடுகளில் முதலீடுகள் செய்துள்ளதுடன் தடைபடாத வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். குறிப்பாக துருக்கி, சூடான் மற்றும் அல்ஜீரியா நாடுகளில் சிறு, குறு நிறுவனங்கலிலும் கட்டுமான நிறுவனங்களிலும் ஹமாஸ் படைகள் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 360 மில்லியன் டொலர்
மேலும், அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவி அளிப்போரின் எண்ணிக்கை ஒன்றும் குறைந்துவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஹமாஸ் படைகளுக்கு ஈரான் நிதியுதவி அளித்து வருகிறது.

ஆண்டுக்கு 70 முதல் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் பல்வேறு கட்டங்களாக அனுப்பி வருகிறது. மேலும், ஹமாஸ் படைகள் ஆட்சி நடத்தும் காஸா பகுதியின் 2.5 பில்லியன் டொலர் பட்ஜெட்டில், 1.1 பில்லியன் டொலர் தொகையை பாலஸ்தீன நிர்வாகம் அளித்து வருகிறது.

மட்டுமின்றி, மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அரசு ஊழியர்களின் சம்பளத்தை கட்டார் செலுத்தி வருகிறது. மேலும் பிராந்தியத்தின் 100,000 ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதத்திற்கு 100 டொலர் தொகையை நிவாரணமாக வழங்குகிறது.

ஆனால் ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவி அளிப்பதை கட்டார் மறுத்து வருகிறது. மட்டுமின்றி, 2021ல் அமெரிக்கா ஆதரவுடன், காஸா பகுதிக்கு ஆண்டுக்கு 360 மில்லியன் டொலர் நிதியுதவி அளிக்க கட்டார் உறுதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.