5,000 அமெரிக்க வைரக்கற்களால் உருவான அயோத்தி ராமர் கோவில் வடிவ நெக்லஸ்: வியாபாரியின் அசத்தல் பரிசு
5,000 அமெரிக்க வைரக்கற்களால் உருவான அயோத்தி ராமர் கோவில் வடிவ நெக்லஸை வைர வியாபாரி ஒருவர் கோவிலுக்கு பரிசாக அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில்
இந்திய மாநிலமான குஜராத், வைர வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிறது. உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை சூரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 70 ஏக்கர் நிலப்பரப்பில், 2.7 ஏக்கர் அளவில் அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணிகள் ரூ.1800 கோடி பொருள் செலவில் நடந்து வருகின்றது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
ராமர் கோவில் தோற்றத்தில் வைர நெக்லஸ்
இந்நிலையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி கௌஷிக் ககாடியா என்பவர் ராமர் கோவிலுக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளிக்க தயார் செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வைர வியாபாரி, “5 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க வைரங்கள், 2 கிலோ வெள்ளியால் ராமர் கோவில் வடிவத்தில் நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 35 நாட்களில் 40 நகை வடிவமைப்பாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.
இது விற்பனைக்காக உருவாக்கப்படவில்லை. ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
#WATCH | Gujarat: A diamond necklace has been made on the theme of Ram temple in Surat. 5,000 American diamonds have been used in this entire design.
The diamond necklace is made of 2 kg silver, 40 artisans completed this design in 35 days.
The diamond merchant said, “It is… pic.twitter.com/sf7jGmq1b5
— ANI (@ANI) December 19, 2023