தனது ஓய்வு வயதை அறிவித்த எம்.ஏ சுமந்திரன்
இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில்,
“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என கூறியுள்ளார்.