ராஜபக்சர்களிடையே குழப்பம்..! பதவியை துறந்த பசில் நாட்டைவிட்டும் வெளியேற்றம்
பொதுஜன பெரமுன அமைப்பின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அதன்படி பசில் ராஜபக்ச டுபாய் வழியாக அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுன மாநாட்டில் பசில் ராஜபக்ச தேசிய அமைப்பாளர் பதவியை விட்டு விலக தீர்மானித்ததையடுத்து அந்த பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்திருந்தது.
அதேசமயம் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் சுமார் ஒன்றரை மாதங்கள் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன, இதேவேளை பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தை சூழவுள்ள பகுதியில் திடீரென பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையைில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, 30 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலங்கம காவல் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.