மியன்மாரில் பயங்கரவாத குழுவிடம் சிக்கியுள்ள 56 இலங்கையர்கள்
தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை சேர்ந்த பயங்கரவாத குழுவொன்றிடம் சிக்குண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்ப துறை வேலைகளிற்காக தாய்லாந்து சென்ற இலங்கையர்களே இவ்வாரு சிக்குண்டுள்ளனர். மியன்மாரின் பயங்கரவாத குழுவின் சைபர் குற்றங்களிற்கான பகுதியொன்றில் உள்ள முகாமில் இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையர்களை பயங்கரவாத குழுவினர் சித்திரவதை
அதேவேளை இலங்கையர்களை பயங்கரவாத குழுவினர் சித்திரவதை செய்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை இலங்கையர்களை விடுவிப்பதற்காக தலா ஒரு நபரிடமிருந்து 8000 அமெரிக்க டொலர்களை பயங்கரவாத குழுவினர் கோருகின்றனர்.
இது குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்த மியன்மாருக்கான இலங்கைதூதுவர் , மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் 32 பேரை விடுவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய 56 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள தூதுவர், சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம் இலங்கயைர்களை மியன்மார் அல்லது தாய்லாந்திற்கு செல்ல முயலவேண்டாம் எனவும் இலங்கையர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.