காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு
காசாவில் உள்ள அகதிகள் மூகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
காசாவில் தாக்குதல்
இருதினங்களுக்கு முன்பு தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி தாஅக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த அகதிகள் முகாம் மீது தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் காசாவின் யூனிஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.
மேலும் இதில் பலாயிரக்கணககானோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.