இந்திய நாடாளுமன்றத்தில் இடைநிறுத்தப்பட்ட 141 உறுப்பினர்கள்: வெளியான காரணம்
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக 78 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் இடைநிறுத்தப்பட்டன.
குற்றச்சாட்டு
மேலும், இன்றைய தினமும் நாடாளுமன்றத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 49 பேருக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதால் மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் பாரிய குற்றச்சாட்டுக்ளை முன்வைத்துள்ளன.