போதைப்பொருள் கடத்தல்; சந்தேக நபரின் பலகோடி சொத்துக்கள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான பத்துக் கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
அதன்படி கஹதுடுவ மூனமலவத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் பத்துக் கோடி பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சொத்து எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை வீட்டின் உரிமையாளர் வெளிப்படுத்தத் தவறியதால், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தேகநபருக்கு சொந்தமான இரண்டு மாடி வீடு, சொகுசு கார், இரண்டு காணிகள் மற்றும் மூன்று மாடிக் கட்டிடம் என்பன கைப்பற்றப்பட்டதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.