சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும், தற்போது பெட்ரோல் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய தரகு பணத்தில் 35 சதவீதத்தை பராமரிப்பு கட்டணமாக வசூலிக்க மீண்டும் கூட்டுத்தாபனம் தயாராகி உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக இடைநிறுத்தம்
குறித்த பணத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும், அவ்வாறு வழங்கப்படாவிடின் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த நேரிடும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது 238 சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தற்போது 2.75 சதவீத தரகு பணம் கிடைக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்படும் தரகு தொகையில் 0.25 சதவீதத்தை மாதாந்திர பயன்பாட்டு கட்டணமாக கூட்டுத்தாபனம் வசூலிக்கிறது.
இந்த நிலையில் மேலும் ஒரு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை அறவிடுவது நியாயமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.