ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் பாரிய வெற்றி : ஜெலென்ஸ்கி
உக்ரைனின் ராணுவம் கருங்கடலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று(20) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
கடல்சார் வர்த்தக பாதை
“கருங்கடலில் ரஷ்ய போர்க்கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி, கடல்சார் வர்த்தக பாதைகளை உக்ரைன் பாதுகாத்துள்ளது.
உக்ரேனிய கருங்கடலில் ரஷ்ய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது.
நாம் என்ன செய்ய வேண்டும், என்ன ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது போன்ற பலவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்க மொஸ்கோ முயற்சித்தது.
ரஷ்யா – உக்ரைன் போர்
உக்ரைனின் ராணுவத் தலைமை 4,50,000 முதல் 5,00,000 மக்களை அணிதிரட்ட முன்மொழிந்துள்ளது.
ரஷ்யாவுடனான போர் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் உக்ரைன் உறுதியுடன் இருந்தால் விரைவாக வெற்றிபெற முடியும்” என வலியுறுத்தியுள்ளார்.