;
Athirady Tamil News

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் குறித்து வெளியான தகவல்

0

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி டிசம்பர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இவ்வருடமும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

அடிப்படை தகுதிகள்

  1. 2022 (2023) ஆண்டில் க.பொ.த. (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரம் பயில்வதற்கு தகுதிபெற்றிருத்தல்.
  2. அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்றல்.
  3. குடும்ப மாத வருமானம் ரூ. 100,000 இற்கு குறைவாக இருத்தல்.
    விண்ணப்பப் படிவம்
    இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை அதிபர் செயலகத்தின் இணையத்தளங்கள்: presidentsoffice.gov.lk, அதிபர் நிதியம்: presidentsfund.gov.lk மற்றும் அதிபர் ஊடகப் பிரிவு: pmd.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள், 2023 டிசம்பர் 22ஆம் திகதிக்கு முன், தாங்கள் பரீட்சை எழுதிய பாடசலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதால், எனவே தகுதியுடைய சகல மாணவர்களும் டிசம்பர் 22 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அதிபர் நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.