;
Athirady Tamil News

அறுபது வினாடிகளில் விசா: வெளிநாடு ஒன்றில் அறிமுகமான புதிய முறைமை

0

சவுதி அரேபியாவில் விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த விசா தளமொன்று (unified visa platform) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் அனைத்து வகையான விசாக்களும் இனி ‘KSA Visa’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமை ஒன்றின் மூலம் வழங்கப்படவுள்ளது.

குறித்த முறையின் மூலம் விண்ணப்பம் கிடைத்த 60 வினாடிகளுக்குள் விண்ணப்பதாரிகளுக்கு விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து விசாக்கள்
மேலும், 30க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை இணைக்கும் KSA Visa Portal விசா நடைமுறை எளிதாக்கப்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, இதன் மூலம் ஹஜ் (Hajj Visa) மற்றும் உம்ரா விசாக்கள் (Umrah Visa) மற்றும் Business Visa, Family Visa, Visit Visa மற்றும் employment Visa ஆகிய அனைத்து விசாக்களையும் எளிதாக பெற்றுக் கொள்ள முடியும்.

விசாவுக்கான காலம்
எவ்வாறாயினும், முன்னர் விசா வழங்குவதற்கு விண்ணப்பம் பெறப்பட்ட திகதியிலிருந்து 45 நாட்களுக்கும் மேலான காலம் தேவைபட்டது எனினும் தற்போது விண்ணப்பம் பெற்ற 60 வினாடிகளில் விசா வழங்க கூடியாகவுள்ளது.

அத்துடன், KSA Visa தளத்தின் ஒரு முக்கிய அம்சமாக smart search engine கருதப்படுகிறது, இதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு என்ன வகையான விசாக்கள் தேவைப்படும் என்பதை அறிய பெரிதும் உதவுகின்றதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.