;
Athirady Tamil News

டிரம்ப் போட்டியிடாவிட்டால் நானும் போட்டியிட மாட்டேன் : விவேக் ராமசாமி அதிரடி அறிவிப்பு!

0

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால், தாமும் போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்க உள்ளார்.

குடியரசு கட்சியின் போட்டி
இந்த நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்ளிட்ட நால்வர் ஜோ பைடனுக்கு எதிராக போட்டியிட உள்ளனர்.

டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டம்
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்க மறுத்து, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், 2024 தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து டிரம்ப், அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு
டிரம்ப் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை சட்ட விரோதமாக தாம் கருதுவதாக விவேக் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொலராடோவில் நடைபெற உள்ள குடியரசு கட்சியின் ஆரம்ப கட்ட தேர்தலில் போட்டியிட டிரம்ப் அனுமதிக்கப்படா விட்டால், தாமும் போட்டியில் இருந்து வதாக அறிவித்துள்ளார்.

குடியரசு கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் இதே போன்று விலக வேண்டும் எனவும், இல்லாவிடில் அவர்கள் இந்த சட்ட விரோத சூழ்ச்சியை அமைதியாக அங்கீகரிக்கிறார்கள் என அர்த்தமாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது அமெரிக்காவிற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் விவேக் ராமசாமி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.