மாணவர் தூதுவர்களுக்கு யாழில் சின்னம் சூட்டல்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (21) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 87 பாடசாலைகளின் மாணவர் தூதுவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாணவர் தூதுவர்கள் பாடசாலைகளில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அவதானம் செலுத்துவர்.
பாடசாலையில் மாணவர்கள் எவ்வாறு ஆரோக்கியமான சூழலையும், ஆரோக்கியமான குடும்ப சூழலையும், ஆரோக்கியமான சமூக சூழலையும் கட்டியெழுப்ப முடியும் மற்றும் மாணவர்களின் ஒழுக்கநெறிகள் தொடர்பாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மாணவர் தலைவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.