;
Athirady Tamil News

இறக்குமதிக்கு தடை; எகிறும் வெங்காய விலை

0

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்றைய தினம் (20) ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இறக்குமதிக்குத் தடை
இந்தியா வெங்காய இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. இந் நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் சில்லரை விலை, 700 ரூபாயைத் தாண்டும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நேற்றைய தினம் பல சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.